Skip to main content

Super Tamils

ஆசிரியர் 59 இலட்சம் மோசடி – அதிர்ச்சி சம்பவம்

களுத்துறை பகுதியில் வீடுகளுக்குச் சென்று மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவர், அங்கிருந்த பெண்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம, கனேகம பகுதியைச் சேர்ந்த இவர், பாடம் கற்பிக்கச் செல்லும் வீடுகளில் தமக்கு அவசர பணத்தேவை இருப்பதாகக் கூறி பெண்களிடம் இருந்து நகைகளைப் பெற்றுள்ளார். அளுத்கம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரனின் பிள்ளைக்குக் கற்பிக்க வந்த இவரிடம் கடந்த 2025 மார்ச் மாதம் […]

Read More

யாழ்ப்பாணம்; மதமாற்ற குற்றச்சாட்டு; விசாரணை கோரிக்கை

யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீது மதம் மாற்றம் மற்றும் பண மோசடி தொடர்பான புகார்கள் கிளம்பியுள்ளன. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உறவினர்கள், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் குறித்து பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, 64 வயதுடைய நபர் ஒருவருக்குப் பணமும் பொருள்களும் ஆசை காட்டப்பட்டு, அவர் மதமாற்றம் செய்யப்படவிருந்ததாக அவருடைய குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக உரிய தரப்பினர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Read More

கடவுச்சீட்டு பெற நேரில் வர தேவையில்லை

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு இன்று (13) சேவை பெறுவதற்காக பொதுமக்கள் வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் நேற்று இந்த அவசரமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீரென ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாத காரணத்தால், மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கமான சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் […]

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

வானிலை அறிக்கையின்படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் மதியத்திற்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம். மேலும், மேற்கு மற்றும் சப்ரகமுவ […]

Read More

இணைய வணிகம் பெயரில் ரூ.60 இலட்சம் மோசடி; CID விசாரணை

பெண்ணொருவரிடம் 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி, ஒரு பெண்ணிடமிருந்து 61 இலட்சத்து 5,600 ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சந்தேகநபர்களில் ஒருவரது வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், அந்தப் […]

Read More

உலக பரா தடகளம்; தங்கம் வென்ற ஜனனி தனஞ்சனா

துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீற்றர் (T46/47 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட ஜனனி, மின்னல் வேகத்தில் இலக்கை அடைந்து முதலிடத்தைப் பிடித்தார். சர்வதேச அரங்கில் அவர் வென்றுள்ள இந்தத் தங்கம், இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதேபோல், ஆண்களுக்கான நீளம் பாய்தல் (T46/47 பிரிவு) போட்டியில் இலங்கையின் புத்திக ஹேஷான் வெள்ளிப் பதக்கம் வென்று […]

Read More

இளைஞன் மீது தாக்குதல்;நடிகை மகன் உள்ளிட்ட குழுவுக்கு நீதிமன்ற அதிரடி உத்தரவு

கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரியவில், இளைஞன் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராஜகிரியவில் இளைஞன் ஒருவர் மண்வெட்டியால் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர். இந்தக் காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி இது குறித்து வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் சுமார் […]

Read More

கல்கிசையில் பாரிய சுற்றிவளைப்பு – பெண் அளித்த தகவல்

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் (பெண்) ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத் தகடுகள் உள்ளிட்ட பல பொருட்களைக் கல்கிஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இரத்மலானையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கல்கிஸ்ஸவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிக்கின. அங்கு 10 கிராம் ஐஸ், 8 இலட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. […]

Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (12) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதன்படி, நுவரெலியா, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் ஓரளவு மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில […]

Read More

சீனாவில் ஹாலோகிராபிக் தொழில்நுட்பம் மூலம் இலங்கை சுற்றுலா ஊக்கம்

சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு புதிய முயற்சியாக, பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் தத்ரூபமான ஹோலோகிராபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுலா விளம்பரங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது. பீஜிங்கின் மிகவும் பிரபலமான ‘ரிட்டன்’ பூங்காவிற்கு அருகிலேயே தூதரகம் அமைந்துள்ளதால், அந்த வழியாகச் செல்லும் ஏராளமான மக்கள் இந்த முப்பரிமாணக் காட்சிகளை ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். இந்த நவீனக் காட்சிக் கருவியானது இலங்கையின் அழகை எட்டு முக்கிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தி அசத்துகிறது. பேரின்பம், பாரம்பரியம், திருவிழாக்கள், வனவிலங்குகள் மற்றும் […]

Read More