பெண்ணொருவரிடம் 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி, ஒரு பெண்ணிடமிருந்து 61 இலட்சத்து 5,600 ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சந்தேகநபர்களில் ஒருவரது வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், அந்தப் பணத்தை இருவரும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி வலைப்பின்னல் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Two men from Colombo and Kuliyapitiya were arrested for defrauding a woman of over 6.1 million LKR under the guise of an online business investment. The CID found that the suspects shared the transferred funds between them, and further investigations are currently underway.