கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொலைந்து போகும் அல்லது திருடப்படும் தொலைபேசிகள் நிதி மோசடி மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் எச்சரித்துள்ளார். உங்கள் தொலைபேசி காணாமல் போனால் உடனடியாக சிம் அட்டையை முடக்கிவிட்டு, IMEI இலக்கத்துடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதுடன் www.ineed.police.lk இணையதளத்திலும் பதிவு செய்வது அவசியமாகும்.
கடந்த 2025ல் 2,355 தொலைபேசிகள் காணாமல் போனதுடன் 2,019 போன்கள் திருடப்பட்டுள்ளன. பிறிதொருவரின் தொலைபேசியைப் பயன்படுத்துவது அல்லது திருடப்பட்ட பொருள் எனத் தெரிந்தே அதனை வாங்குவது சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகளை வாங்கும்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Police spokesperson F.U. Woodler reported that over 2,350 mobile phones were lost and 2,019 stolen in 2025, warning that these devices are often used for criminal activities. Citizens are urged to block SIM cards immediately, report losses via the ‘I-Need’ police portal using IMEI numbers, and avoid purchasing used phones without verification to escape potential prison sentences.