Skip to main content

Super Tamils

சொகுசு காரில் சந்தேக நடவடிக்கை; இருவர் கைது

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அந்த வழியாக வந்த கப் ரக வாகனம் ஒன்றை வழிமறித்து பொலிஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்தச் சோதனையின் போது, வாகனத்திற்குள் மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்த பொலிஸார், அதிலிருந்த இரண்டு பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 22 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

விசாரணையில், இந்த போதைப்பொருள் மன்னார் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

__________________________________________________________________________________________

Vavuniya Police arrested two individuals today after seizing 22kg of Kerala cannabis during a vehicle inspection in the Pattanishur area. Acting on a tip-off, officers intercepted a pickup truck traveling from Mannar to Trincomalee and discovered the drugs hidden inside. The suspects are currently in custody and will be produced in court following further investigations.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *