Skip to main content

Super Tamils

யாழ். துப்பாக்கிச் சூடு; பிரேத பரிசோதனை அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மதிக்காமல் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய அல்பினோ அருள் பயாஸ் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நேற்று இந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில், துப்பாக்கித் தோட்டா இளைஞனின் நெற்றியைத் துளைத்துக்கொண்டு மூளைக்குள் ஊடுருவியதே அவரது உயிரிழப்பிற்கு நேரடி காரணமாக அமைந்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

______________________________________________________________________________________

An autopsy conducted at the Jaffna Teaching Hospital has confirmed that a 17-year-old youth from Vaddukoddai died after a police bullet pierced his forehead and entered his brain. The fatal shooting occurred in the Allaipiddy area of Jaffna when police opened fire on a vehicle that allegedly failed to follow their orders to stop.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *