யாழ். துப்பாக்கிச் சூடு; பிரேத பரிசோதனை அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மதிக்காமல் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய அல்பினோ அருள் பயாஸ் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நேற்று […]