Skip to main content

Super Tamils

கல்கிசையில் பாரிய சுற்றிவளைப்பு – பெண் அளித்த தகவல்

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் (பெண்) ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத் தகடுகள் உள்ளிட்ட பல பொருட்களைக் கல்கிஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இரத்மலானையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கல்கிஸ்ஸவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிக்கின. அங்கு 10 கிராம் ஐஸ், 8 இலட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

அத்தோடு, மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்களுக்கான சுமார் 30 போலி இலக்கத் தகடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் தங்கம் மற்றும் மின்னணு தராசு ஒன்றும் அங்கிருந்து மீட்கப்பட்டது.

இந்தச் சொத்துக்கள் ஒரு முக்கிய குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியிடமிருந்து அந்தப் பெண்ணுக்கு கிடைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

_________________________________________________________________________________________________________________________________________

Mount Lavinia Police seized ice drugs, a firearm, and over 30 counterfeit vehicle number plates following information from a female suspect in custody. The raid also recovered cash and gold jewelry linked to an organized crime and drug trafficking network.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *