கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரியவில், இளைஞன் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜகிரியவில் இளைஞன் ஒருவர் மண்வெட்டியால் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர். இந்தக் காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி இது குறித்து வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னரே நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Police arrested seven youth, aged 15 to 24, for attacking a young man with a hoe in Rajagiriya. The arrests were made using viral social media footage of the incident, which reportedly took place two months ago.