சொகுசு காரில் சந்தேக நடவடிக்கை; இருவர் கைது
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அந்த வழியாக வந்த கப் ரக வாகனம் ஒன்றை வழிமறித்து பொலிஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இந்தச் சோதனையின் போது, வாகனத்திற்குள் மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்த பொலிஸார், அதிலிருந்த இரண்டு பேரைக் கைது […]