பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் 17 வயது யுவதி ஒருவர், அயல் வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி மேலதிக வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்கத்து வீட்டைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், அந்த யுவதியின் தலையில் கோடரியால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த யுவதி உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (04) உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தம்பால பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலுக்கான காரணம் குறித்து புலஸ்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
_______________________________________________________________________________________________
A 17-year-old girl from Thambala, Polonnaruwa, has died after being attacked with an axe by a 26-year-old neighbor while returning from tuition classes. The suspect has been arrested and remanded by the Polonnaruwa Magistrate’s Court, while police continue to investigate the motive behind this brutal killing.