Skip to main content

Super Tamils

யாழில் இளைஞர்–யுவதிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்து: எச்சரிக்கை

இளம் வயதுடையவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய் பரவல் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. தற்போதைய தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவிலான நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்த நிலைமை ஒரு அபாய சிக்னலாகும். எனவே, நமது எதிர்கால சந்ததியான இளைய தலைமுறையினரை இந்த நோயில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும்.

இதனை முன்னிட்டு, யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும், யாழ் மருத்துவ பீடமும் இணைந்து எதிர்வரும் 7-ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தவுள்ளன. யாழ் மருத்துவ பீடத்தில் நடைபெறவுள்ள இந்த விழிப்புணர்வு செயலமர்வுக்கு உலக மருத்துவ நிறுவனம் (IMHO) தனது ஆதரவை வழங்குகிறது.

இந்த நிகழ்வில் ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்த உணவுத் திருவிழா மற்றும் சுவாரசியமான பட்டிமன்றம் போன்றவை இடம்பெறவுள்ளன. அத்துடன் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஊடாக நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

________________________________________________________________________________________________

Specialist Dr. Mahalingam Aravindan has warned that Jaffna is witnessing a sharp rise in diabetes cases, ranking second only to Colombo, with a concerning trend among the youth. To combat this, the Jaffna Teaching Hospital and the Faculty of Medicine are organizing a public awareness event on Saturday, including a food festival and seminars to educate the younger generation on prevention.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *