தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் உரிய காலத்தில் வெளியேறுவதைக் கண்காணிப்பதற்காகப் புதிய டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் விசா விதிமுறைகளை மீறுபவர்களை மிக எளிதாகக் கண்டறிய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நடைமுறைப்படி, ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும்போது எல்லைப் பாதுகாப்பு முகவரகம் அவரது விவரங்களைப் பதிவு செய்கிறது. இருப்பினும், விசா காலம் முடிந்தவுடன் அந்த நபர் தானாகவே வெளியேறிவிட்டாரா என்பதை உடனுக்குடன் கண்டறியும் தொழில்நுட்ப வசதி தற்போது இல்லை. இந்தச் செயல்முறை அதிக நேரம் எடுப்பதால், அதனை நவீனமயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கனேடிய குடிவரவுத் துறை அமைச்சின் தகவல்படி, வரும் 2026-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகவுள்ளன. இது அந்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தோர் மத்தியில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சுற்றுலாப் பயண விசா (Visitor Visa) உள்ளிட்ட பல்வேறு தற்காலிக விசாக்கள் மூலம் கனடா சென்றுள்ள பல தமிழர்களுக்கு இந்த புதிய நடைமுறை பெரும் நெருக்கடியையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________
The Canadian Immigration Minister has announced stricter enforcement for temporary visa holders to leave the country once their visas expire, utilizing new digital tracking tools. With approximately 1.9 million temporary visas set to expire in 2026, this policy shift creates a significant challenge for many individuals, including the Tamil community currently in Canada on visitor and other temporary visas.