எயார்பஸ் ஒப்பந்தம்…! பி.பி. ஜயசுந்தரவிடம் 4 மணிநேரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை
சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்திக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவிடம் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவரது இல்லத்தில் வைத்து சுமார் நான்கு மணித்தியாலங்கள் இந்த விசாரணை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, குறித்த ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து அதிகாரிகளால் கேள்விகள் எழுப்பப்பட்டு, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கான […]