பிரித்தானியாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6 சதவீதத்தால் குறைந்து, 685,565 ஆகப் பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட கல்வி விசாக்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, மாணவர்களுடன் வரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்கள் 57 சதவீதம் வரை பெருமளவில் குறைந்துள்ளன.
இலங்கை மாணவர்களுக்கிடையே பிரித்தானிய முதுகலை படிப்புகள் மீதிருந்த ஆர்வம் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதை தரவுகள் காட்டுகின்றன. இதன்படி, இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு முதுகலை கல்விக்காகச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 36 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையே இந்தத் திடீர் மாற்றத்திற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கை மாணவர்கள் தற்போது தங்களது உயர்கல்விக்காக கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளைத் தங்களது புதிய இலக்குகளாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
International student enrollment in the UK has seen a notable decline, with study visas dropping by 31% and dependent visas by 57%. Sri Lankan students specifically show a 36% decrease in postgraduate applications, largely due to restrictions on bringing family members. Consequently, many Sri Lankan students are shifting their academic focus toward alternatives like Canada, Australia, and Scandinavian countries.