உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினத்துடன் (12.02.2026) ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேசச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,910 டொலராகப் பதிவாகியுள்ளது. நேற்று ஒரு அவுண்ஸ் தங்கம் 5,078 டொலர்கள் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தத் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் சரிவு காணப்படுகிறது. இன்று ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74.75 டொலராகப் பதிவாகியுள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களின் எதிரொலியாக, உள்நாட்டுச் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Global gold prices have experienced a decline today, falling to $4,910 per ounce compared to yesterday’s rate of $5,078. Silver prices also saw a dip, currently trading at $74.75 per ounce. These fluctuations in the international market are expected to influence local gold rates throughout the day.