சி.டி. விக்ரமரத்னவின் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூதவுடல் இன்று காவல்துறையின் பூரண மரியாதையுடன் பொரளையிலுள்ள தனியார் பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
மக்களின் அஞ்சலிக்காக பொரளையில் உள்ள தனியார் மயானத்தில் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலபே, தலாஹேனவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல்துறை குழுக்கள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பொரளையில் அமைந்துள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மாஅதிபரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
The remains of former Inspector General of Police C.D. Wickramaratne are set to be cremated today with full police honors at a private cemetery in Borella, following his recent passing and subsequent tributes from prominent political figures.