Skip to main content

Super Tamils

“பாடகர் சங்கீதனின் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தை நாடும் சட்டத்தரணி”

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகரான கணேஷ்குமார் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இதற்கமைய, உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் சத்தியக்கடதாசிகளில் சங்கீதனிடம் கையெழுத்து வாங்கப்பட்டிருப்பதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை மிக விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறையிலுள்ள பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கைக்குள்ளும், உலக நாடுகளிலுள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்வொன்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எழுச்சிப் பாடல் ஒன்றை பாடினார் என்ற காரணத்திற்காகவே அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

குறிப்பிட்ட அந்தப் பாடலைப் பாடியதன் வழியாக, விடுதலைப் புலிகள் அமைப்பை அவர் மீண்டும் உருவாக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

A fundamental rights petition is set to be filed in the Supreme Court seeking the release of young Tamil singer Ganeshkumar Sangeethan, who was detained under the Prevention of Terrorism Act (PTA). His lawyer confirmed that the necessary documents and affidavits have been signed to expedite the filing process. Sangeethan was arrested and remanded on allegations of attempting to revive the LTTE after he performed an awakening song associated with the organization at a recent event, sparking widespread local and international demands for his release.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்