“பாடகர் சங்கீதனின் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தை நாடும் சட்டத்தரணி”
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகரான கணேஷ்குமார் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் சத்தியக்கடதாசிகளில் சங்கீதனிடம் கையெழுத்து வாங்கப்பட்டிருப்பதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை மிக விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]