Skip to main content

Super Tamils

“பரசூட்” முறையில் நெல் அறுவடை விழா

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில், களைநெல்லைக் கட்டுப்படுத்தி அதிக விளைச்சலைப் பெறக்கூடிய “பரசூட்” முறையிலான நெற்செய்கை அறுவடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள விவசாயி கு.விநாயகமூர்த்தியின் வயலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் நா.மகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில், கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அவர்களுடன் கௌரவ விருந்தினர்களாக விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலைய பிரதிப்பணிப்பாளர் இ.சஞ்சீவன் மற்றும் கிளிநொச்சி கிழக்குப் பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் கை.பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், வடமாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் த.யோகேஸ்வரன், பாடவிதான உத்தியோகத்தர்கள், பல விவசாய போதனாசிரியர்கள், உருத்திரபுரம் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் எனப் பலரும் இந்த வெற்றிகரமான அறுவடை நிகழ்வில் பங்கேற்றனர்.

___________________________________________________________________________________________________________________________________

A harvest festival showcasing the high-yield “parachute” paddy cultivation method, effective for weed control, was held at farmer K. Vinayagamoorthy’s field near the Uruthirapuram Porikkadavai Amman Temple. Presided over by Agriculture Instructor N. Maharajen, the event was attended by senior officials including Kilinochchi Agrarian Development Deputy Commissioner P. Thevarathan, who highlighted the success of this modern farming technique.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *