யாழ்ப்பாணம்; மதமாற்ற குற்றச்சாட்டு; விசாரணை கோரிக்கை
யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீது மதம் மாற்றம் மற்றும் பண மோசடி தொடர்பான புகார்கள் கிளம்பியுள்ளன. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உறவினர்கள், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் குறித்து பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, 64 வயதுடைய நபர் ஒருவருக்குப் பணமும் பொருள்களும் ஆசை காட்டப்பட்டு, அவர் மதமாற்றம் செய்யப்படவிருந்ததாக அவருடைய குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக உரிய தரப்பினர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]