Skip to main content

Super Tamils

கடவுச்சீட்டு பெற நேரில் வர தேவையில்லை

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு இன்று (13) சேவை பெறுவதற்காக பொதுமக்கள் வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் நேற்று இந்த அவசரமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீரென ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாத காரணத்தால், மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் வழக்கமான சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் வழமை போல் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய தினம் வருகைத் தந்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் திங்கட்கிழமை முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உறுதி அளித்துள்ளது.


The Ministry of Public Security has advised the public to avoid visiting the Department of Immigration and Emigration offices today due to an unresolved technical glitch in their computer system. Normal operations are set to resume on Monday (16th), and applicants who were affected by the disruption yesterday will be given priority on that day.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *