Skip to main content

Super Tamils

தாஜுதீன் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்…! மகிந்த ராஜபக்ச வீடு குறித்த தகவல்கோப் குழுவில் வெடிப்பு.

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் பேசப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான வீடு ஒன்று குறித்து பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் (COPE) அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய பல விபரங்கள் வெளிவந்துள்ளன. சர்ச்சைக்குரிய இந்த வீடு கொழும்பு, மாத்தா வீதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். கடந்த 1999 ஆம் ஆண்டில், மகிந்த ராஜபக்ச அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி […]

Read More

இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி- அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மிக வேகமாக சரிந்து வருவதன் காரணமாக, நாட்டில் அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, ஏற்றுமதித் தொழிலுக்கான மூலப்பொருட்களை வாங்கும் செலவும் பெருமளவில் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ரூபாயின் இந்த வீழ்ச்சிக்கு இணையாக, நாட்டின் பொதுவான பணவீக்கமும் கணிசமான அளவு உயரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்குத் தேவையான எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துகள் […]

Read More

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…! எபோலா பரவல் ‘மிகவும் அதீத’ அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, அந்நாட்டு அளவில் ‘மிகவும் அதீத’ (Very High) எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்தத் தொற்று அண்டை நாடுகளுக்கும் ‘அதிக’ (High) ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், சர்வதேச அளவில் இதற்கான அச்சுறுத்தல் தற்போதைக்குக் ‘குறைவாகவே’ (Low) இருப்பதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸானது, […]

Read More

மீண்டும் ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை..!

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை இன்று (21) திடீரெனக் கணிசமாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது. நேற்றைய விலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இன்று 24 கரட் தங்கம் பவுணுக்கு 6,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளுமே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இன்றைய நிலவரப்படி சந்தையில் தங்கத்தின் புதிய விலை விபரங்கள் பின்வருமாறு: ஒரு பவுண் 24 […]

Read More

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கைத் தாண்டிப் போர் வெடிக்கும்…!ஈரான் அதிரடி எச்சரிக்கை

அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், இந்த மோதலானது மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் தாண்டி உலகின் பிற பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவிவிடும் என்று ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. “அமெரிக்கா எங்களைத் தாக்கினால், போர் மத்திய கிழக்கைக் கடந்து மற்ற இடங்களுக்கும் பரவும்” என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், மீண்டும் தாக்குதலைத் தொடங்க தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். […]

Read More

போதைப்பொருள் விற்பனையால் சொகுசு வாழ்க்கை..!அதிரடியாக கைப்பற்றிய பொலிசார்.

கொழும்பு, பொரளைப் பகுதியில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடத்திய தீவிர புலனாய்வுத் திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள சிறிசர உயன பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதியினர், கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு […]

Read More

ஈரான் கொடுத்த வாய்ப்பை இழந்தது இலங்கை! எண்ணெய் கப்பல் இல்லாததால் ஏற்பட்ட நிலை..

ஈரானிடமிருந்து எண்ணெய் மற்றும் பிற வசதிகளை  பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக  அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். எவ்வாறாயினும், தற்போதைய நெருக்கடியான சூழலில் இலங்கைக்கு எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ஈரான் முன்வந்துள்ளமையை ஒரு சாதகமான நகர்வாக அமைச்சர் பாராட்டியுள்ளார்.  “கப்பல்களைக் கொண்ட நாடுகள் அத்தகைய வசதியிலிருந்து பயனடைய முடியும். எங்களிடம் கப்பல்கள் இல்லை. ஈரானிலிருந்து எரிபொருளை […]

Read More

பிரித்தானியா குடிவரவு சட்ட மாற்றம்; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிக்கல்

பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் உறுதிப்படுத்தியுள்ள புதிய குடிவரவு சீர்திருத்தங்களின்படி, அந்நாட்டில் நிரந்தரமாக வசிப்பதற்கான காலவரையற்ற வதிவிட அனுமதி (ILR) பெறும் தகுதிகளில் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறைகள் அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. முக்கியமாக, திறமையான தொழிலாளர் விசா (Skilled Worker Visa) உள்ளிட்ட பெரும்பாலான பிரிவுகளில், ILR பெறுவதற்கான தகுதிக்காலம் தற்போதுள்ள 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், பராமரிப்புத் தொழிலாளர்கள் போன்ற பட்டப்படிப்பு தகுதிக்கு […]

Read More

1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு; விநியோக தகவல் வெளியீடு

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் மக்கள் மத்தியில் ஏற்பட்ட திடீர் பதற்றம் காரணமாக, பலரும் அளவுக்கு அதிகமாக எரிபொருளைச் சேமிக்க முயன்றனர். இதன் விளைவாகவே நேற்று காலை சில எரிபொருள் நிலையங்களில் தற்காலிகமாகக் கையிருப்பு தீர்ந்திருந்தது. இருப்பினும், நேற்று அதிகாலை முதலே விநியோக நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 6 மணி […]

Read More

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை ஏற்றம்; உலக நாடுகள் அதிர்ச்சி

மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிவாயு சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் நேற்றைய முன்தினம் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் காரணமாக அந்த வழியாக நடைபெற்று வந்த கப்பல் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கொண்டுள்ள கட்டார் நாடு, தனது ஏற்றுமதியில் பெரும்பகுதியை இந்த […]

Read More