நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து 26 வயதுடைய சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த போதே இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் விடுதியின் 9ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த அந்தப் பெண் திருமணமானவர் என்பதும், அவரது கணவர் ஒரு தொழிலதிபர் என்பதும் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த சமயத்தில் அவரது கணவர் வர்த்தக நடவடிக்கைகளுக்காக குருநாகல் பகுதிக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் கீழே விழுவதற்கு முன்னதாக, சுமார் ஒரு மணிநேரம் தொலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அவரது மரணம் குறித்த மர்மத்தை விலக்க மேலதிக விசாரணைகளுக்காக அந்தப் பெண்ணின் கையடக்கத் தொலைபேசியைப் பொலிஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.
A 26-year-old Swedish woman died after falling from the 9th floor of a popular hotel in Negombo. Initial investigations reveal that the deceased was married to a businessman who was away in Kurunegala for work at the time of the incident. Police have seized her mobile phone for further analysis, as she was reportedly on a phone call for about an hour shortly before her fall.