Skip to main content

Super Tamils

மட்டக்களப்பில் தீவிரமடையும் தொற்றாநோய்…! தடுப்பு நடவடிக்கைகள்.

மட்டக்களப்பு பகுதியில் புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை நாம் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி எம்.ருதேசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (01.06.2026), மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தத் தடுப்பு நடவடிக்கைக்கான நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன், பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மோகனகுமார், மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார் மற்றும் பல மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் எனப் பலரும் முன்னிலை வகித்திருந்தனர்.

தொடர்ந்து பேசிய வைத்திய அதிகாரி,
புகையிலைப் பாவனையால் ஏற்படும் தீமைகள் பற்றி நாம் எல்லாரும் ஓரளவுக்கு அறிந்ததே. ஆனால், இன்று நமது சமூகத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்து வரும் இந்தப் பழக்கத்தை வேரோடு அழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

தொற்றாநோய்கள் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நாம் நினைத்தால் தவிர்க்கக்கூடிய, தடுக்கக்கூடிய மிக முக்கியமான ஆபத்துக் காரணி இந்த புகைப்பழக்கம் தான். மனித உயிர்களைப் பறிக்கும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் உருவாவதற்கு இதுவே பிரதான காரணியாக அமைகிறது.

நமது இரத்த ஓட்ட மண்டலத்தைப் கடுமையாகப் பாதிக்கும் இந்தப் பழக்கம், வேறு பல ஆபத்தான நோய்களுக்கும் வழிவகுக்கிறது. எனவே, இதனை நாம் தடுத்து நிறுத்தவும், குறைக்கவும் வேண்டியது அவசியம். இதற்காகவே பல பெரிய அளவிலான முன்னெடுப்புகளை நாம் தற்போது கையில் எடுத்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

On the second day of International Anti-Smoking Week, the Batticaloa Regional Department of Health Services and the District Secretariat launched an initiative to combat the rising trend of smoking and substance abuse in the region. Speaking at the event, Dr. M. Ruthesan, the Medical Officer in charge of Non-Communicable Diseases (NCD) prevention, emphasized that smoking is a major, preventable risk factor responsible for life-threatening illnesses like cancer and cardiovascular diseases, and urged for intensified measures to eradicate this social menace.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்