Skip to main content

Super Tamils

சீரற்ற வானிலையால் லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயம் நாளை மூடப்படும்

வியாழக்கிழமை பிற்பகல் நிலவிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வெள்ளிக்கிழமை (02) பாடசாலையைத் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் சுற்றுப்புறம், வகுப்பறைகள், கணினி அறை மற்றும் பிரதான மண்டபம் என்பவற்றுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் தற்போது அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாகக் காணப்படுகின்றது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பாடசாலையின் அதிபர் கிருஷ்ணராஜா, நுவரெலியா கல்வி வலைய பணிப்பாளருடன் […]

Read More

புட்டிப்பால் குடித்த ஒரு வயதுக் குழந்தை நுரை தள்ளி உயிரிழப்பு; அனலைதீவில் சோகம்

அனலைதீவில் புட்டிப்பால் குடித்துவிட்டு உறங்கிய ஒரு வயதுக் குழந்தை, வாயாலும் மூக்காலும் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்துள்ளது. அனலைதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இனிசன் கிருத்திகா என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று காலை தாயார் குழந்தைக்குப் புட்டிப்பால் ஊட்டி உறங்க வைத்துள்ளார். சில மணி நேரத்தின் பின்னர் குழந்தையின் வாயிலும் மூக்கிலும் நுரை வந்திருப்பதைக் குடும்பத்தினர் கவனித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குழந்தை உடனடியாக அனலைதீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஊர்காவற்துறை […]

Read More

முத்துராஜவெல – கட்டுநாயக்க விமான எரிபொருள் குழாய் திட்டப்பணிகள் இன்று ஆரம்பம்

முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை விமான எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான புதிய குழாய் கட்டமைப்பை அமைக்கும் பணிகள் இன்று (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் நிகழ்விலேயே இதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. இந்தப் புதிய குழாய் திட்டத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் மிகவும் பாதுகாப்பாகவும் திறமையாகவும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது…!

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் பொலிஸார் நேற்று (30) நடத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 4 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தலா 2 கிராம் வீதம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களில் 28 வயதுடைய நபர் சம்மாந்துறை மற்றும் வாழைச்சேனை பகுதிகளை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், இவர் ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் பலமுறை கைது செய்யப்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மற்றைய சந்தேகநபர் வளத்தாப்பிட்டி பகுதியைச் […]

Read More

மாதம்பையில் விபத்து…! இரு சிறுவர்கள் பலி, தாய் படுகாயம்.

மாதம்பை – குளியாப்பிட்டி வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தாய் படுகாயமடைந்துள்ளார். தும்மலசூரிய, வீரகொடியான பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த பிள்ளைகளின் தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று […]

Read More

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு…! 7 பேர் காயம்.

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 7 ஊழியர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை சிறப்பு சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த எதிர்பாராத விபத்தின் காரணமாக வைத்தியசாலைக் கட்டிடத்தின் சமையலறைப் பகுதி கடுமையான சேதமடைந்துள்ளதுடன், பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகப் பொலன்னறுவை […]

Read More

இரு சிறுவர்கள் உயிரிழந்த தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்…! மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்.

தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தை வீட்டின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது அண்மையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் கஹதுடுவ மற்றும் பிளியந்தலை பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடைய இருவர் மேல் மாகாண தெற்கு திசை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று […]

Read More

மட்டக்களப்பு சித்தாண்டியில் இரு பிள்ளைகளின் தாய் கத்திக்குத்தில் உயிரிழப்பு…! கணவரைத் தேடும் பொலிஸார்

மட்டக்களப்பு சந்திாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவன் – வியாழக்கிழமை (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற பரிதாப சம்பவம் குறித்து சந்திவெளி பொலிசார் தகவல். மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார் தங்கராசா பிரதீபா என்பவர்தான் இந்தத் துயரச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளியான மூத்தவன் வாசன் என்பவரை, தங்கராசா பிரதீபா […]

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கான தீர்ப்பு இன்று…!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கினைப் பொறுத்தவரை, மொத்தம் 23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகளின் கீழ் அது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக மிக நீண்ட காலமாக நடந்து வந்த விசாரணைகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதியன்று நிறைவுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து, […]

Read More

கிளிநொச்சி விசேட பெண்நோயியல் மையத்தின் கட்டில்களை வெளிமாவட்டத்திற்கு மாற்ற உத்தரவு என தகவல்…! உடனடியாக கைவிடுமாறு வைத்தியசாலை சமூகமும் பிரதேசவாசிகளும் வலியுறுத்தல்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண விசேட பெண்நோயியல் மருத்துவ மையத்திற்கு வழங்கப்பட்ட விசேட கட்டில்களை வெளிமாவட்ட வைத்தியசாலைக்கு வழங்குமாறு மாகாண மட்ட உயரதிகாரிகள் பணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் உள்ள இந்த புதிய மருத்துவ மையத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட விசேட கட்டில்களை வெளிமாவட்டத்திற்கு அனுப்பச் சொல்லி மாகாண உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் அங்கே உள்ள மருத்துவ வட்டாரங்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. […]

Read More