Skip to main content

Super Tamils

அதிகாலையில் கோர விபத்து…! 20 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து.

பதுளை நோக்கி கொழும்பில் இருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கொழும்பில் இருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்று அதிகாலை வேளையில் எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாகப் பாய்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த கோர விபத்தில் பஸ்ஸில் பயணித்த 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வைத்தே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த உடனே விரைந்து செயல்பட்ட மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர், காயமடைந்த அனைவரையும் உடனடியாக மீட்டு தியத்தலாவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர் அவசர சிகிச்சைக்காக பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவ மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

An SLTB bus traveling from Colombo to Badulla met with an accident near the Diyatalawa railway station in the early hours of the morning, plunging into a 20-foot deep precipice. The incident resulted in injuries to 40 passengers, who were subsequently admitted to the Diyatalawa Hospital. One passenger in critical condition has been transferred to the Badulla Hospital for advanced medical treatment.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்