எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் குறிப்பிட்ட சில எரிபொருட்களின் விலைகளைக் குறைத்து புதிய விலைத்திருத்தத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 414 ரூபாயாகவும், லங்கா ஆட்டோ டீசலின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த எரிபொருள் விலை குறைப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியே நிலவி வருகின்றது.
தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வாழ்க்கைச் செலவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த விலை குறைப்பு எந்த வகையிலும் தங்களுக்குப் போதுமானதாக இல்லை என்று மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
கடந்த வெசாக் பண்டிகை காலத்தில் எரிபொருள் விலையை தாறுமாறாக உயர்த்திவிட்டு, இப்போது பொசன் பண்டிகையை முன்னிட்டு 20 ரூபாயைக் குறைத்து அரசாங்கம் எங்களுக்கு என்ன ‘தானம்’ வழங்குகிறதா? இன்றைய சூழலில் கடையில் ஒரு டீ குடிக்கவோ அல்லது ஒரு மிட்டாய் வாங்கவோ கூட இந்த 20 ரூபாய் பத்தாது. குறைந்தபட்சம் ஒரு 100 ரூபாயாவது குறைத்திருக்க வேண்டாமா?” என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. ஆனால், அதற்கேற்ப மக்களுக்கான சம்பளம் இன்னும் உயர்த்தப்படவில்லை. முதலில் 100 ரூபாய் விலையை ஏற்றிவிட்டு, பின்னர் 20 ரூபாயைக் குறைப்பதால் யாருக்கு என்ன லாபம்? அடுத்த மாதமாவது விலையை இன்னும் கணிசமாகக் குறைக்க அரசாங்கம் முன்வர வேண்டும்” என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The public and motorists in Sri Lanka have expressed severe dissatisfaction over the recent fuel price reduction by the Ceylon Petroleum Corporation, which lowered the price of 92-octane petrol by 20 rupees (to 414 rupees) and auto diesel by 25 rupees (to 382 rupees). Citizens argue that this minor price drop is completely insufficient to cushion the soaring cost of living, pointing out that reducing prices by a small margin after massive hikes offers no real relief to their ongoing economic struggles.