அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள மஸ்கடின் பகுதியில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு நபர் மூன்று வெவ்வேறு இடங்களுக்குச் சென்று, மொத்தம் ஆறு பேரை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த கோர சம்பவத்திற்கு குடும்பப் பின்னணியில் ஏற்பட்ட மோதல்கள்தான் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்குள்ள ஒரு வீட்டில் இரத்த வெள்ளத்தில் நான்கு பேர் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பின்னர் உறுதி செய்யப்பட்டது. பலியானவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்ட நபரின் சொந்த பந்தங்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொடூர செயலை 52 வயதான ரியான் வில்லிஸ் மெக்பார்லேண்ட் என்பவர் செய்துள்ளார்.
ஆனால், போலீசார் அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே குற்றவாளி அங்கிருந்து தப்பியோடிவிட்டான். தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில், மற்றொரு வீட்டிலும், ஒரு அலுவலகத்திலும் இன்னும் இரண்டு ஆண்கள் இதேபோல துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். கொலையாளியை தீவிரமாகத் தேடி வந்த போலீசார், இறுதியில் ஒரு பாலத்திற்கு அருகில் மெக்பார்லேண்ட் சடலமாகக் கிடப்பதைக் கண்டுபிடித்தனர்.
போலீசாரின் விசாரணையில், ஆறு பேரைக் கொன்ற பிறகு மெக்பார்லேண்ட் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் மஸ்கடின் நகர காவல் துறை தலைவர் அந்தோணி கீஸ், உயிரிழந்த மெக்பார்லேண்டிற்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அதிர்ச்சிப் படுகொலைகள் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனே தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
In a tragic incident rooted in a family dispute, a 52-year-old man named Ryan Willis McFarland shot and killed six of his relatives across three different locations in Muscatine, Iowa. By the time the police arrived at the scenes, they discovered the victims’ bodies, and later found that the suspect had committed suicide near a bridge. The local police chief, Anthony Kies, revealed that McFarland had a prior criminal record and urged anyone with additional information about the shootings to come forward.