Skip to main content

Super Tamils

பாக்ஸ் ஆபிஸை கலக்கும் சூர்யா…!கருப்பு படத்தின் மாபெரும் வசூல்

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கடந்த மே மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே. பாலாஜி – சூர்யா கூட்டணியில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கடந்த மே 15-ம் தேதி திரைக்கு வந்த இந்தத் திரைப்படம், ஆரம்பத்தில் கொஞ்சம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், ‘கருப்பு சாமி’ வழிபாட்டுப் பின்னணியைக் கொண்ட கதைக் களம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் படத்திற்குக் கிடைத்த அமோக வரவேற்பால், பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு நாளும் வசூல் ரீதியாகப் புதிய புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது ‘கருப்பு’.

இந்தச் சூழலில், படம் வெளியாகி சில வாரங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது உலகளவில் இந்தப் படம் பெற்றுள்ள மொத்த வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கருப்பு திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 312 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.

இதன் மூலம், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜய்யின் பிகில், வாரிசு போன்ற பிரம்மாண்ட படங்களின் வாழ்நாள் வசூல் சாதனைகளை ‘கருப்பு’ திரைப்படம் அசால்ட்டாக முறியடித்துள்ளதாகத் திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

The Tamil film Karuppu, directed by RJ Balaji and starring Suriya, has emerged as a massive box office hit following its release on May 15. Despite receiving mixed reviews initially, the movie’s unique theme centered around the deity ‘Karuppu Sami’ won over audiences, propelling its global box office collection to an impressive 312 crore rupees. With this incredible run, the film has officially surpassed the lifetime box office records of actor Vijay’s blockbusters Bigil and Varisu.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்