நாட்டில், தென்மேற்குப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று முதல் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மேல், சபரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேநேரம், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீட்டரையும் தாண்டி பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதுதவிர, ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்குத் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
The Department of Meteorology has predicted an increase in rainy conditions in the southwestern parts of Sri Lanka starting today. Several provinces and districts, including Western and Sabaragamuva, are expected to experience intermittent showers, with some areas receiving heavy rainfall exceeding 75 mm, while eastern and inland regions may see afternoon thundershowers alongside strong winds across multiple provinces.