மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள கெரூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பாண்டுரங் கோண்டுமங்கள், வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். அதிகார ஆசையில் அவர் செய்த காரியம் தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
பாண்டுரங்கிற்கு மொத்தம் மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆனால், அம்மாநில தேர்தல் விதிகளின்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற கட்டுப்பாடு உள்ளது. தேர்தலில் நிற்பதற்குத் தடையாக இருந்த மூன்றாவது குழந்தையை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் ஒரு கொடூரமான முடிவை எடுத்துள்ளார்.
தனது 6 வயது மகளான பிராச்சியைக் காரில் ஏற்றிக்கொண்டு அண்டை மாநிலமான தெலங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கால்வாயில் இரக்கமின்றி அந்தக் குழந்தையைத் தள்ளிவிட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார். இதில் அந்தச் சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.
சிறுமியின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியபோது, பாண்டுரங் முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மழுப்பியுள்ளார். ஆனால், பொலிஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
தேர்தல் விதிகளுக்கு அமைய தனக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக, தனது இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒருவரையே அவர் கொலை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த வாக்குமூலத்தைக் கேட்டு பொலிஸாரே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
___________________________________________________________________________________________
In a horrific incident in Maharashtra, a 28-year-old man named Pandurang Kondumangal murdered his 6-year-old daughter to bypass the state’s election rule that disqualifies candidates with more than two children. He allegedly drove the child to a canal in Telangana and pushed her in, later claiming she was undergoing medical treatment. Following a police investigation, he confessed to killing one of his twin daughters to secure his eligibility for the upcoming local panchayat elections.