மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பகுதியில் மிகக் கொடூரமான இச்சம்பவம் பதிவாகியுள்ளது. தனது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குறித்த சிப்பாய் தனது மனைவியை ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவர் மீது மிளகாய்த் தூளைத் தூவி மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அத்துடன் அவரைப் பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அந்தப் பெண் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது மருத்துவ அறிக்கையை எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பரசன்கஸ்வெவ போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
An Anuradhapura Magistrate has remanded a navy soldier until January 26th for allegedly torturing his wife in the Parasangaswewa area. The suspect reportedly tied his wife to a tree, assaulted her, threw chili powder on her, and subjected her to sexual abuse. The victim is currently receiving treatment at the Anuradhapura Teaching Hospital, and the court has ordered the submission of her medical reports at the next hearing.