Skip to main content

Super Tamils

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (22) முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று காலை 8 மணி முதல் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க அறிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது தவிர, வைத்தியர்களுக்கான கொடுப்பனவு விவகாரத்தில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், நாளை (23) முதல் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக டாக்டர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Doctors at the Colombo National Eye Hospital are conducting a strike today to protest against irregular transfers. This action follows ongoing strikes in the Eastern Province, with the Government Medical Officers’ Association (GMOA) warning of a potential nationwide strike starting tomorrow if the government fails to address issues regarding doctors’ allowances.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *