Skip to main content

Super Tamils

900 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

நிட்டம்புவ பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. கோணஹேன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நிட்டம்புவ – பின்னகொல்லவத்தை பகுதியில் உள்ள அரலிய ஒழுங்கையில் அதிரடிச் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 61 கிலோ 838 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
Sri Lanka Police | Travel Destination Sri Lanka

கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 90 கோடி ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட நபர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ‘டுபாய் வருண’, ‘மொஹமட் சித்திக்’ மற்றும் சிறையில் இருக்கும் ‘லேனா’ என அழைக்கப்படும் திலிந்து சஞ்சீவ ஆகியோரின் மிக நெருங்கிய சகா இவரென்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


The Police Special Task Force (STF) arrested a suspect in Nittambuwa with over 60 kilograms of “Ice” (Crystal Meth) worth more than 900 million rupees. Acting on intelligence, officers intercepted a three-wheeler in the Pinnagollawatta area and seized 61.838 kg of the drug. Investigations revealed that the suspect is a close associate of notorious organized crime figures and drug traffickers, including “Dubai Varuna” and “Mohamed Siddique,” who are currently abroad.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *