Skip to main content

Super Tamils

தமிழ்நாட்டில் கருப்பு படத்தின் வசூல் சாதனை…! ஷேர் மற்றும் லாபம் வெளியீடு

கருப்பு சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம். இதுவே இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமும் ஆகும். கருப்பு தான் சூர்யாவின் திரை வாழ்க்கையிலும் அதிக வசூல் ஈட்டிய படமும்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

ஒவ்வொரு திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை ஆவலோடு தெரிந்துகொள்ளும் ரசிகர்கள், அதே அளவிற்கு அந்தத் திரைப்படம் எவ்வளவு லாபத்தை அள்ளியிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளவும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் எந்தளவுக்கு லாபத்தைக் குவித்துள்ளது என்பது பற்றிய சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதைப்பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

கருப்பு திரைப்படம் நமது தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 175 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக மட்டுமே படத்திற்கு சுமார் 80 கோடி ரூபாய் வரை தியேட்டர் ஷேர் கிடைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த கணக்கின்படி பார்த்தால், இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி ரூபாய்க்கும் மேல் நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது.

நடிகர் சூர்யாவின் சினிமா பயணத்திலேயே தமிழ்நாட்டில் மிக அதிகமாக வசூலித்த திரைப்படமாக இந்த ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது. அதேபோல், அவரது கேரியரில் தமிழ்நாட்டில் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அதிக லாபத்தை வாரி வழங்கிய திரைப்படமும் இதுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Actor Suriya’s latest blockbuster movie “Karuppu” has emerged as the highest-grossing Tamil film of the year and the biggest hit of his career. Recent reports indicate that the movie has collected over ₹175 crores in Tamil Nadu alone, yielding a distributor share of nearly ₹80 crores and a net profit exceeding ₹40 crores, making it both the highest-grossing and most profitable venture for the actor in the state.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்