கனடாவில் இடம்பெற்ற ‘போராட்டம்’ திரைப்பட சிறப்புத் திரையிடல்.
ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் கனடாவில் இடம்பெற்றுள்ளது. இதைக் காண்பதற்காகப் பெரும் திரளான புலம்பெயர் தமிழர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். இத்திரைப்படத்திற்குப் பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். பாஸ்கரன் கந்தையா வழங்கும் இப்படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளை IBC Tamil Productions மற்றும் BlackBoard நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்துள்ளன. இதன் இசை வெளியீட்டு விழா கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கனடாவில் […]