Skip to main content

Super Tamils

14 நாட்களில் ₹111.80 கோடி! சூரியின் ‘மண்டாடி’ உலகளாவிய வசூல்.

சூரி, சுஹாஸ் மற்றும் மஹிமா நம்பியார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள மண்டாடி திரைப்படத்தின் 14 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகராக வேகமாக வளர்ந்து வரும் சூரி நடிப்பில் வெளியான விடுதலை, மாமன் மற்றும் கருடன் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றன. இந்த வரிசையில் பிரம்மாண்டமான பொருட்செலவில் திரைக்கு வந்த ‘மண்டாடி’ திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. குறிப்பாக, இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, இந்த ஆண்டின் அதிக வசூலை ஈட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் தற்போது தனது வெற்றிகரமான 14 வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் இப்படம் உலக அளவில் செய்துள்ள மொத்த வசூல் குறித்த அதிகாரப்பூர்வமான நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, மண்டாடி திரைப்படம் 14 நாட்களில் உலகளாவிய ரீதியில் மொத்தம் ரூ. 111 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Actor Soori’s latest sports-action drama Mandaadi, co-starring Suhas and Mahima Nambiar, has successfully crossed the Rs 111 crore mark worldwide in its 14-day theatrical run, cementing its place among the top-grossing Tamil films of the year.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்