கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான ‘ஹாய்’ திரைப்படத்தின் 7 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘ஹாய்’ அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் ‘ஹாய்’. இப்படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, கதிர் மற்றும் காவ்யா போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு அழகான காதல் கதைக்களத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்திற்குச் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும், பாக்ஸ் ஆபிஸில் ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வசூல் விவரம் தற்போது திரையரங்குகளில் 7 நாட்களை வெற்றிகரமாகக் கடந்துள்ள ‘ஹாய்’ திரைப்படம், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் பார்க்கும்போது, முதல் 7 நாட்களில் மட்டும் இப்படம் உலகளாவிய ரீதியில் ரூபாய் 11 கோடிக்கும் அதிகமான தொகையை வசூல் செய்து அசத்தியுள்ளது. இது தற்போதைய நிலைக்கு இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள ஒரு அருமையான பிக்கப் என்று கூறலாம்.
The 7-day box office collection details for the movie ‘Hai’, starring Kavin and Nayanthara and directed by debutant Vishnu Edavan, have been released, showing a worldwide collection of over 11 crore rupees despite mixed reviews.