Skip to main content

Super Tamils

உலக சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தமே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. அதன் அடிப்படையில், இன்றைய நிலவரப்படி உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் சுமார் 4,737 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக முன் எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத […]

Read More

திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி: பொலிஸார் விசாரணை

பதுளையில் இருந்து நெலுவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்று, இன்று திங்கட்கிழமை முற்பகல் சென் ஜேம்ஸ் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவெனப் பரவியதால் அந்த முச்சக்கர வண்டி முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தின் போது நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித உயிர்ச் சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஆட்டோ தீப்பிடிப்பதைக் கண்டதும் அதிலிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆட்டோ திடீரெனத் தீப்பற்றியதற்கான […]

Read More

ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்

இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளைப் பெற வேண்டும் என்ற ஆசையில், ஆபத்தான சாகசங்களைச் செய்து வீடியோக்களை (Reels) எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இத்தகைய விபரீத முயற்சிகள் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடுகின்றன. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலத்தின் மீது ஏறி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க முயன்ற வாலிபர் ஒருவர், எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. […]

Read More

நள்ளிரவு டெலிவரி: சுடுகாட்டிற்கு அழைத்த பெண் – ஊழியர் அதிர்ச்சி

உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு அவ்வப்போது வினோதமான சம்பவங்கள் நடப்பது வழக்கம் தான். ஆனால், சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பெண் உணவு ஆர்டர் செய்துவிட்டு, அதை டெலிவரி செய்ய ஒரு சுடுகாட்டிற்குள் வருமாறு அந்த ஊழியரை அழைத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்னைத் தேடி வந்த அந்த ஊழியர் பயத்தில் நடுங்கியபடி, உணவை மயானத்தின் நுழைவு வாயிலிலேயே பெற்றுக் கொள்ளுமாறு எவ்வளவோ கெஞ்சியுள்ளார். இருப்பினும், அந்தப் பெண் […]

Read More

பல யுவதிகள் துஷ்பிரயோகம்: தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

18 வயதுக்குட்பட்ட பல பதின்ம வயது பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண்டி, பேராதனை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தொழிலதிபர் ஒருவர், சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணையில் இந்த […]

Read More

100+ சிறுமிகள் பாதிப்பு: கனடா வாழ் தமிழருக்கு ஆயுள்

கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த 40 வயது ரமணன் பத்மநாதன், அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை இணையதளம் வழியாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக இந்தச் சுரண்டலில் அவர் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜரான ரமணன், சிறுமிகளை வற்புறுத்தி ஆபாசப் படங்களைத் தயாரித்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். சுமார் ஏழு ஆண்டுகளாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த இந்தச் சதித் திட்டம், அவர் […]

Read More

படிக்க வந்த இடத்தில் கொடூரம்: 22 வயது பெண் வன்கொடுமை

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தக் கல்லூரியின் கேன்டீனில் பணியாற்றி வந்த ஊழியர் மற்றும் உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை சைதாப்பேட்டை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கேன்டீனில் வேலை செய்து வந்த குணசேகர் என்பவர் அந்தப் பெண்ணை முதலில் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவருடன் பணியாற்றிய கார்த்திகேயன் மற்றும் […]

Read More

நாட்டின் பல பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மதியத்திற்குப் பிறகு ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒரு சில பகுதிகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். அதேபோல், அதிகாலை நேரங்களில் சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, பதுளை போன்ற மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகமாகக் காணப்படும் […]

Read More

தங்கம் விலை தொடர் சரிவு: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளமை நகைப் பிரியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,889 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்றைய தினம் (2) அது 4,687 டொலராகக் குறைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு பவுன் […]

Read More

யாழில் மருத்துவ தவறு: சிறுமியின் கை துண்டிப்பு – நீதிவான் கடும் அதிருப்தி

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதில் ஏற்பட்ட பாதிப்பால் அவரது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது. இது மருத்துவத் தவறு எனக்கூறி பெற்றோர் தொடர்ந்த வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பொலிஸார் […]

Read More