புகையிலை–மதுபான பயன்பாடு: இலங்கைக்கு பாரிய இழப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற சுகாதாரம், ஊடகங்கள் மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புகையிலை மற்றும் மதுபானப் பாவனையால் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மட்டும் அரசாங்கம் ஆண்டுதோறும் 225 முதல் 240 பில்லியன் ரூபா வரை செலவிட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மக்களை இந்தத் தீய பழக்கங்களிலிருந்து விடுவிப்பதற்காக, புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தில் […]