Skip to main content

Super Tamils

ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்

இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளைப் பெற வேண்டும் என்ற ஆசையில், ஆபத்தான சாகசங்களைச் செய்து வீடியோக்களை (Reels) எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இத்தகைய விபரீத முயற்சிகள் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடுகின்றன.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலத்தின் மீது ஏறி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க முயன்ற வாலிபர் ஒருவர், எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மேம்பாலத்தின் மேலிருந்த கான்கிரீட் சிலாப் மீது ஏறி அவர் நடனமாடிக் கொண்டிருந்தபோது, அந்தப் பலகை திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. இதில் 22 வயதான அந்த இளைஞரின் தலை மீது கல் விழுந்ததில், அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

_____________________________________________________________________________________________

A 22-year-old youth in Uttar Pradesh’s Bareilly died while attempting to film an Instagram reel on an under-construction flyover. The tragic incident occurred when a concrete slab collapsed while he was dancing, causing him to fall and suffer fatal head injuries, highlighting the dangerous lengths some young people go to for social media popularity.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *