18 வயதுக்குட்பட்ட பல பதின்ம வயது பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கண்டி, பேராதனை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தொழிலதிபர் ஒருவர், சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசி மற்றும் கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை ஆய்வு செய்தபோது, அவர் சுமார் 36-க்கும் மேற்பட்ட சிறுமிகளைத் தவறான முறையில் பயன்படுத்தியிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காணவும், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விபரங்களைத் திரட்டவும் பொலிஸார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகச் சந்தேக நபரை 72 மணிநேரம் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட உள்ளது.
தற்போது பொலிஸ் பிடியில் உள்ள இந்த நபர், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
______________________________________________________________________________________________
A 38-year-old businessman from Peradeniya, Kandy, has been arrested for allegedly sexually abusing over 36 underage girls. Following a formal complaint, police seized digital evidence confirming the exploitation, and authorities are now seeking a 72-hour detention order to identify the victims and conduct further investigations.