குருநாகல் – யக்வில, தம்பாடிய பகுதியில் தளபாடக் கடை நடத்தி வந்த 42 வயதுடைய உரிமையாளர் ஒருவர் இன்று (09.02.2026) கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டே அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மனைவி வேலைக்காக வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக இருந்த முன்விரோதமே இந்தப் படுகொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, 40, 45 மற்றும் 46 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்டுள்ள மூவரிடமும் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
___________________________________________________________________________________________________________________________________
A 42-year-old furniture shop owner was brutally murdered with an iron rod today in the Thambadiya area of Kurunegala, allegedly due to a long-standing grudge. Police have arrested three suspects aged 40, 45, and 46, one of whom is a former army soldier, while further investigations into the crime continue.