கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த 40 வயது ரமணன் பத்மநாதன், அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை இணையதளம் வழியாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக இந்தச் சுரண்டலில் அவர் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜரான ரமணன், சிறுமிகளை வற்புறுத்தி ஆபாசப் படங்களைத் தயாரித்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். சுமார் ஏழு ஆண்டுகளாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த இந்தச் சதித் திட்டம், அவர் கைது செய்யப்பட்ட பிறகே ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
நீதிமன்றத் தகவல்களின்படி, அவர் தன்னை ஒரு அமெரிக்க டீனேஜ் சிறுவனைப் போலக் காட்டி போலிக் கணக்குகளைத் தொடங்கி, இளம் பெண்களின் நம்பிக்கையைப் பெற்று இந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இவர் ஏற்கனவே கனடாவிலும் இதேபோன்ற குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட ரமணன் பத்மநாதன், தற்போது தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளதால் அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
____________________________________________________________________________________________
Ramanan Padmanathan, a 40-year-old Canadian national from Toronto, faces a potential life sentence after pleading guilty in a U.S. federal court to the sexual exploitation of over 100 minors. Operating a sophisticated scheme for seven years, he used fake online identities to pose as a teenager and manipulate young girls, a criminal pattern that continued until his arrest in December.