Skip to main content

Super Tamils

சிறுமிகள் கடத்தல்–கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இரவில் கொடூரம்

ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் உள்ள பிர்தாண்ட் எல்லைக்குட்பட்ட ஹர்லடி பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவைக் கண்டு ரசித்துவிட்டு, இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனுடன் இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

அவர்கள் வழியில் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 6 முதல் 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது. அந்த கும்பல் சிறுமியருடன் வந்த சிறுவனை மிரட்டி துரத்திவிட்டு, இரண்டு சிறுமிகளையும் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளை அருகில் இருந்த விவசாய நிலத்திற்கு இழுத்துச் சென்ற அந்த கும்பல், அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்யத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

________________________________________________________________________________________________

Two tribal girls in Jharkhand were abducted and gang-raped by a group of unidentified men while returning home from a village festival. The attackers chased away a young boy accompanying them before taking the girls to a nearby field, and local police have now formed a special team to track down the suspects.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *