பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி மற்றும் பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை விற்பனை செய்வது போல நடித்து, அவற்றுடன் ‘மாவா’ மற்றும் ‘பாபுல்’ போன்ற போதைப்பொருட்களை மறைத்து விற்று வரும் கும்பல்கள் குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய மறைமுக விற்பனை முறைகள் மூலம் மாணவர்கள் இலக்கு வைக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், கொக்கெய்ன், ஐஸ் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை 5 கிராமுக்கு மேல் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் வலியுறுத்தினார்.
தமது அன்புக்குரியவர்கள் இந்த போதைப்பொருள் அரக்கனுக்கு பலியாவதற்கு முன்னரே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தங்கள் பகுதிகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் நடமாட்டங்கள் இருந்தால், அது குறித்து உடனடியாக தகவல் வழங்குவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
__________________________________________________________________________________________
Police Spokesperson Woodler has warned of increasing drug distribution near schools, where illicit substances like ‘Mawa’ and ‘Babul’ are being disguised as candies and snacks. Emphasizing that possession of over 5 grams of hard drugs can carry the death penalty, the police urged the public to report suspicious activities to protect students and the community from this growing threat.