முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அங்குள்ள விளையாட்டு மைதானக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞனை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாயார், புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். தனது மகன் மாயமானது குறித்து அவர் கண்ணீருடன் வழங்கிய தகவலின் பேரில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.
விசாரணையின் போது, அந்த இளைஞனின் வீட்டிற்கு அருகிலுள்ள விடியல் விளையாட்டு மைதானத்தில் அவரது கைத்தொலைபேசி கிணற்றுக் கட்டில் கிடப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் கிணற்றுக்குள் அவரது காலணி ஒன்று மிதப்பதையும் அவதானித்த காவல்துறையினர், உடனடியாகக் கிணற்று நீரை வெளியேற்றித் தேடினர். அப்போது அந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார். இது திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
_____________________________________________________________________________________________
The body of a 24-year-old man from Puthukkudiyiruppu, Mullaitivu, was recovered from a well at the Vidiyal sports ground after he went missing. The youth had reportedly left home on a motorcycle with an unidentified person the previous evening; following a missing person’s report, police discovered his phone and shoes near the well, leading to the grim discovery now being investigated as a potential murder.