Skip to main content

Super Tamils

முன்னாள் காதல் விவகாரம்: பேராசிரியைக்கு நடந்த கொடூரம்

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரும், அதே ஊரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் இவர்களது காதல் பாதியிலேயே முறிந்துவிட்டது. அதன் பின்னர், அந்த மருத்துவர் சக மருத்துவப் பேராசிரியை ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தனது முன்னாள் காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை ஏற்க முடியாத அந்தப் பெண், பழிவாங்கும் நோக்கில் ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார். இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ஐ.வி. நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட இரத்தத்தை அவர் ரகசியமாகப் பெற்றுள்ளார்.
Discussion | Mpumalanga 'missing' about 21,000 HIV patients - eNCA

சம்பவத்தன்று, அந்த மருத்துவரின் மனைவி கல்லூரியில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திட்டமிட்டபடி ஆட்களை வைத்து அவர் மீது மோட்டார் சைக்கிளை மோதச் செய்துள்ளார். விபத்தில் காயமடைந்த அந்தப் பெண் மருத்துவருக்கு உதவுவது போல நடித்து, ஒரு முச்சக்கரவண்டியை வரவழைத்துள்ளார். அந்த முச்சக்கரவண்டியில் அவரை ஏற்றும் போது, மறைத்து வைத்திருந்த எச்.ஐ.வி. இரத்தம் கலந்த ஊசியை அவர் உடலில் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் மருத்துவர் வலியால் கூச்சலிடவே, குற்றத்தைச் செய்த பெண் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.

________________________________________________________________________________________________

In a shocking act of revenge, a woman in Andhra Pradesh injected HIV-infected blood into her former lover’s wife, who is a medical professor. After orchestrating a minor road accident to trap the victim, the perpetrator posed as a helper and administered the infected blood; following a police complaint by the victim’s husband, four suspects have been arrested.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *