தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர அவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அண்மையில் நிலவிய அதிக ஆபத்தான சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது.
எனினும், எதிர்வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை, எல் நினோ காலநிலை மற்றும் இடைப் பருவமழை ஆகியவற்றால் டெங்கு மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்காக, நேற்று முதல் ஒரு வார கால சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் தினசரி 1,200 முதல் 1,300 வரை பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பினால் தற்போது தினசரி சராசரியாக 159 ஆகக் குறைந்துள்ளது. இந்தநிலையில் சிறப்பு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 6 மாகாணங்கள், 15 மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதேவேளை, அதிகாரிகள் நிலமையை விரைவாகக் கட்டுப்படுத்தியிருந்தாலும், மாவட்டங்கள் தோறும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் இன்னமும் கண்டறியப்படுவதால் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர எச்சரித்துள்ளார்.
Despite a notable drop in daily dengue cases due to joint efforts, health authorities have initiated a week-long special eradication program across multiple provinces and districts to counter potential resurgences from upcoming monsoons and weather shifts, while urging the public to stay vigilant as mosquito-breeding spots are still being found.