நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவற்றில் சுமார் 7,188 இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய சாதகமான சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், டெங்கு கொசுக்கள் பெருகும் வகையில் தங்களது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்த ஆறாயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, வழக்கு தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் புதிதாக 986 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாடு முழுவதும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் மொத்தம் 53,159 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த டெங்கு பாதிப்பு காரணமாக இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The Public Health Inspectors Association inspected 85,712 locations across Sri Lanka between June 1 and 25, identifying 7,188 mosquito breeding sites and initiating legal action against over 6,000 individuals for maintaining unclean premises. According to the National Dengue Control Unit, the country has recorded 53,159 dengue cases and 31 deaths so far this year, with a single-day spike of 986 cases reported just two days ago.